பாடசாலை புதிய கட்டிடத்தை முழுமையாக வழங்கக்கோரி மட் / காத்தான்குடி அல்-இக்பால் வித்தியாலய மாணவர்கள் மீண்டும் பாடசாலை பகிஸ்கரிப்பில்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

DSC00939மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் கடந்த புதன் கிழமை புதிய பாடசாலை கட்டிடத்தை வழங்;கக்கோரி ஆர்பாட்டத்திலும், பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.

இதற்கமைய ஸ்தலத்திற்க்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மத்தி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் யு. அஹமட்லெப்பை புதன்’வியாழன்’வெள்ளி மூன்று தினங்களுக்கு மூடுமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை புதிய கட்டிடத்தில் பாடசாலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்களிடம் உறுதியளித்ததற்கிணங்க மாணவர்கள் கலைந்து சென்றதோடு மீன்டும் இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு விஜயம் செய்த போது அங்கு வருகைதந்த மட்டக்களப்பு மத்தி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் யு.அஹமட்லெப்பை புதிய கட்டிடத்தில் மேலே உள்ள அனைத்து வகுப்பறைகளையும் இக்பால் வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கியதோடு புதிய கட்டிடத்தில் கீலே உள்ள அனைத்து  பகுதி வகுப்பறைகளையும் வழங்குவதற்கும் அதற்குள் இருக்கின்ற உபகரணங்களை வெளியேற்றுவதற்கு  கால அவகாசம் தருமாறு பாடசாலை மாணவர்களின் பெற்றோர் பொது மக்களிடம் கேட்டபோது அதற்கு பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கால அவகாசம் வழங்கும் கிகதியை  இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள்’4மாதங்கள் என திகதியை உறுதிப்படுத்தி எழுத்து மூலம் கடிதம் தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் யு.அஹமட்லெப்பை ‘உங்களது கோரிக்கைளை எமக்கு கடிதம் மூலம் உங்களது பள்ளிவாயலால் உறுதிப்படுத்தி எமக்குத் தருமாறும் தான் கட்டிடத்தை முழுமையாக பெற்றுத்தறுவதற்கு மேலதிகாரிகளிடம் கதைத்து நடவடிக்கை எடுப்பேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக், மட்டு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு. அஹமட்லெப்பை மற்றும் இரானுவ அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் விஜயம் செய்திருந்தனர்.

மாணவர்கள் தொடர்ந்தும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment