* 24 மணிக்குள் 119 மி. மீற்றர் மழை
* தம்பங்கேணி குளம் வழியும் நிலை
* அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
* உன்னிச்சைக் குளம் நிரம்பிவழியும் நிலையில்
சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் மிகவும் மோசமாகப் பாதிக் கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பித்துள்ளது.
நேற்றுக் காலை 8.30 மணியு டன் முடிவடைந்த 24 மணித் தியாலத்துள் மட்டக்களப்பு நகரில் 119 மில்லி மீற்றர் மழை பதி வாகியுள்ளதாக மட்டக்களப்பு காலநிலை அவதான நிலைய உத்தியோகத்தர் சிவதாஸ் தெரி வித்தார்.
33 அடி உயர உன்னிச்சை குளம் மீண்டும் நிரம்பி வழிவதால் அதன் கதவுகள் திறக்கப்பட்டு 2 அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ். மோகனராஜா தெரிவித்தார். டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது நீர் நிரம்பாமல் இருந்த ஒரே ஒரு குளமான 14 அடி உயரமான தும்பங்கேணி குளத்தில் தற்போது நீர் நிரம் பியுள்ளது. அங்கு 83 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
தொடரும் மழையினால் மட் டக்களப்பு வாவி கரை புரண்டு ஓடுகிறது. முகத்துவாரம் மற்றும் கோட்டைக் கல்லாறு முகத்துவாரங்கள் வழியாக வெள்ளப் பெருக்கு வங்காள விரிகுடாவை நோக்கி பாய்ந்தவண்ணமுள்ளது. அண்டல் ஓயா மூங்கில் ஆறு சில்லிக்கொடி ஆறு சந்தனமேடு ஆறு முதலிய ஆறுகளில் வெள்ளம் பீறிட்டுப் பாய்கிறது.
முந்தானை ஆற்றில் நீர் பெருகியுள்ளதாலும் உறுகாமம் குளத்தில் நீர் திறந்துவிடப்பட்டுள் ளதாலும் சித்தாண்டி வந்தாறுமூலை பலாச்சோலை முறக்கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிள்ளையாரடி தன்னாமுனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய கிராமங்களிலும் இருதயபுரம், ஊறணி மாமாங்கம், புதிய காத்தான்குடி, கல்லடி, ஆரையம்பதி, செல்வநாகர், ஒல்லிக்குளம், மண்முனை, எருவில், மண்டூர், நாகமுனை பட்டிருப்பு பட்டாபுரம் ஒல்லிமடு பள்ளச்சேனை போன்ற அநேக கிராமங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேதத்துச்சேனை கிராமத்தை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், மட்டக்களப்பு கலால் திணைக்களம், விவசாயத் திணைக்களம் உட்பட பல திணைக்களங் கள் பாடசாலைகள் ஆகிய இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் குடலைப் பருவ வேளாண்மை வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
-தினகரன்
Leave a comment