காக்கிச்சட்டைக்குள் காதல் தகராறு!

n4[1]கொழும்பு பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் அவரது பொலிஸ் காதலனால் நேற்று கழுத்துவெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதலியை கொலை செய்த காதலன் தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்ட காதலனை கொழும்பு தேசிய வைத்திய சாலையின் விபத்துப் பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 7.15 மணியளவில் கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள மேம்பால த்தில் வைத்து இடம்பெ ற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மொனரா கலை பிபிலை பிரதேசத்தைச் சேர்ந்த நதீஷானி மதுஹாசினி சமரசிங்க (26) வென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரி சாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அண்மையில் நியமனம் பெற்று வந்த இப்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் விளையாட்டுப் பிரிவுடன் இணைக்கப்பட்டிருந்தார். கொழும்பு கோட்டையிலுள்ள பெண் பொலிஸாருக் குரிய விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்றுக் காலை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை சந்திக்க மேம்பாலத்திற்கு வந்தபோதே இக்கொலை இடம்பெற்றுள் ளது.

கொலைக்குப் பின்னர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள மேற்படி ஆண் கான்ஸ்டபிள் வலப்பனையைச் சேர்ந்த ஜயசிங்க (29) என்றும் இவர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தமை ஊர்ஜிதமாகியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி ஊர்ஜிதம் செய்தார்.

n4-1[1]நேற்றுக் காலை மேம்பாலத்திற்கூடாக அலுவலகப் பயணிகள் சென்று கொண்டிருந்த வேளையில் மேற்படி இரு காதலர்களும் தமது சிவில் உடைகளில் சாதாரணமாக பேசிக்கொண்டி ருந்ததனை பலரும் கண்டுள்ளனர். சடுதியாக ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னிடமிருந்த கத்தியை உருவி பெண் கான்ஸ்டபிளின் கழுத்து மற்றும் கையை வெட்டியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்ததுடன், அடுத்த கணமே ஆண் பொலிஸ் கான்ஸ்டபிளும் தன் கைவசம் வைத்திருந்த நஞ்சையருந்தி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.

சம்பவ இடத்தை பொலிஸார் துப்பாக்கிகளுடன் சுற்றிவளைத்தபோது ஆண் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவேறு பக்கங்களில் வீழ்ந்து கிடந்ததுடன், இவர்களுக்கு நடுவில் இரத்தக் கறையுடன் கத்தியொன்று காணப்பட்டதாகவும் களத்திலிருந்த பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆஸ்பத்திரியில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். குறித்த கொலையாளி கத்தி மற்றும் விஷம் ஆகியவற்றை தன்னுடன் எடுத்து வைத்திருந்தமையினால் மேற்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை கொலை செய்யும் நோக்கிற்காகவே கொழும்பு வந்திருக்க வேண்டுமென ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்திருப்ப தாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்விருவரிடையிலும் இருந்து வந்த காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த கொலைக்கு காரணமெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்படி ஆண் கான்ஸ்டபிள் தனியாக கொழும்பு வந்தாரா? அல்லது இவருடன் வேறு யாரும் வந்திருந்தனரா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலையினையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அங்கிருந்த தடயப் பொருட்களை சேகரித்து இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் கனிஷ்ட விஜேரட்ண சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

கொலை இடம்பெற்று சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை மேம்பாலத்தினூ டான ஆள் நடமாட்டம் யாவும் முற்றாக தடைசெய்யப்பட்டிருந்ததுடன், அப்பகுதியெங்கும் பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டிருந் தது. சடலம் பின்னர் பிரேத பரிசோதனை களுக்காக பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டது.

மேற்படி ஆண் கான்ஸ்டபிள் தனது தாய்க்கு சுகயீனம் என்று கூறியே விடுமுறை பெற்று கொழும்பு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

– தினகரன்

Published by

Leave a comment