(தொடர்….)
சாரதி ராம்சிங் கொடுத்த தகவலின்படி அவரது சகோதரன் முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். ஏனைய இருவரையும் பிடிப்பதற்காக பொலிஸ் குழுக்கள் அண்டைய மாநிலங்களான பீகார், ராஜஸ்தான் ஆகியவற்றுக்குச் சென்றனர்.
டெல்லி பொலிஸின் வலையில் 21.12.2012 அன்று 5வது சந்தேக நபர் அக்ஷய் தாகுர் சிக்கினார். உத்தர பிரதேச மாநிலத்தில் மறைந்து வாழ் ந்தபோது இவர் பிடிக்கப் பட்டார். 6வது சந்தேக நபரும் கைதானார்.
விசா ரணை நடத்தியதில் 6வது சந்தேக நபர் சிறுவன் என்பது தெரியவந்தது. இதனால் பொலிஸார் அவனது பெயரை வெளி யிடவில்லை. அதே சமயத்தில் டெல்லி திகார் ஜெயிலில் தடுத்துவைக்கப் பட்டிருந்த சந் தேக நபர்களில் சம்பவத்துடன் தொடர்புடை யவர்களை சரி யாக கண்டுபிடிக்க அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது.
மாணவியின் நண்பர் அணிவகுப்பை பார்த்து சம்பவத்தின் போது பஸ்ஸில் இருந்த ஆறு பேரையும் மிகச் சரியாக அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அந்த ஆறு பேர் மீதும் 7 கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கலவரங்கள் கொந்தளிப்புகள்
சப்தர்ஜங் மருத்துவமனை வைத் தியர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவிக்கு 22 ஆம் திகதி மயக்கம் தெளிந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அவரிடம் டெல்லி மஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போது அந்த மருத்துவ மாணவி, ‘நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப் படியாவது என்னை காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை தப்பவிட்டு விடா தீர்கள்’ என்றார்.
இதனை அறிந்த மக்களின் மனதில் ஆத்திரம் பீறிட்டது. ஏற்கனவே பாதி க்கப்பட்ட மாணவிக்காக போராட் டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இது ஆவேசத்தை ஏற்படுத்தியது. இதனால் டெல்லியில் நீதி கோரும் போராட்டங்கள் பரவலாக வெடித்தன. மாணவர்களும் மக்களும் பால், வயது, ஜாதி, மத பேதமின்றி வீதி களில் இறங்கினர்.
இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோசத்துடன் கோஷங்களை எழுப்பினர். டெல்லி முடங்கியது. இயல்பு நிலை சீரழிந்தது. மறுநாள் 23 ஆம் திகதியும் டெல்லியிலுள்ள இந்தியா கேட் பகுதியில் ஆயிரக் கணக்கில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர் களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினார்கள்.
இதையடுத்து இந்தியா கேட் பகு தியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் தடியடி நடத்தியும், தண்ணீர் பீச்சியடித்தும் கலைக்கப்பட்டனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
அரசின் ஆறுதலும் – எதிரணியின் வேண்டுகோளும்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 22 ஆம் திகதி இரவு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின்வீட்டுக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த சோனியாவும், ராகுல் காந்தியும் குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம். உரிய தண்டனை பெற்று கொடுப்போம் என்று உறுதியளித்தனர்.
தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கலவரங்களை நிறுத்தி மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். மக்களின் கோபம் நியாயமா னது என தெரிவித்த அவர் குற்றவாளி கள் தண்டிக் கப்படுவர் எனவும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மறுபுறத்தில் மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து மாணவி கற்பழிப்பு தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண் டும் என்று பா. ஜ. க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சை
பாலியல் பலாத்காரத்தால் பாதிக் கப்பட்ட மாணவிக்கு நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது என 25 ஆம் திகதி (25.12.2012) வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு மேலும் இரு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் 26 ஆம் திகதி (26.12.2012) மாணவியின் உடல் நிலை மீண்டும் மிகவும் மோசம டைந்தது. இதனையடுத்து அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அன்றிரவு சிறப்பு ஏர்-அம்புலன்ஸ் விமானம் மூலம் மாணவி டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்துக்கு மட்டும் கட்டணமாக 60 இலட்சம் ரூபாவை இந்திய மத்திய அரசு வழங்கியது. 27 ஆம் திகதி (27.11.2012) அதிகாலை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக அவருக்கு நவீன சி.டி. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்ட போது மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மாணவி உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக சிங்கப்பூர் வைத்திய நிபுணர்கள் அறிவித்தனர். மறுநாளே மாணவியின் உடல் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின.
மாணவி குடல், நுரையீரலில் கிருமி தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டது. மாணவி உயிரைக் காப்பாற்ற வைத்திய நிபுணர்கள் கடு மையாக பாடுபட்டனர். பலன் கிட் டவில்லை. சிகிச்சைகள் ஏதும் பயன ளிக்காத நிலையில் 29ஆம் திகதி (29.12.2012) அதிகாலை 2.15 மணி யளவில் மாணவி மரணம் அடைந்தார்.
குற்றப் பத்திரம்
ஆரம்பத்தில் பாலியல் பலாத்கார வழக்காக இருந்த இந்த வழக்கு மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து ‘பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்காக பதிவு செய்யப் பட்டது.
சந்தேக நபர்கள் மீது 1000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தயாரித்துள்ள டெல்லி பொலிஸார் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்ட னையாக மரண தண்டனை வழங் குமாறு பரிந்துரை செய்துள்ளனர். அத்துடன் இதற்கு 30 பேர் சாட்சிகளாக இணைக்கப் பட்டுள்ளனர்.
பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம்
டெல்லியில், மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரண மடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியா தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இனிமேல், இதுபோன்ற குற்றங்கள் இடம்பெற்றால் அதற்கு கடும் தண்டனைகள் கொடுக்கும் ரி(8யில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமான சட்டத்தில் அதிரடி திருத்தங்களை மேற்கொள்ள இந்திய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி, சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார். இதன்போது பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறை யிலான ஆண்மை நீக்க தண்டனை வழங்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. இதுதவிர 30 ஆண்டு சிறை, பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்குதல், சிறுவர் என அழைக்கப் படுவதற்கான வயதெல்லை 15 போன்ற பல திருத்தங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த புதிய சட்டமூலம், அடுத்த இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தம் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள், மாநில அரசுகள், சமூக தொண்டு நிறுவனங் களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வரு கிறது.
இரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை
பாலியல் பலாத்கார குற்றங்களை வேரோடு அறுப்பதற்கான முயற்சிகளில் முறையிலான ஆண்மை நீக்க தண் டனை சட்ட ரீதியாக்கப்படுவது எவ் வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானதே.
இந்த சட்டத்தை அறிமுகப்படுத்துவ தில் பல சிக்கல்கள் தோன்றவே சாத்தியங்கள் உள்ளன.
குறிப்பாக மனித உடலில் உள்ள உறுப்பொன்றை ஊனப்படுத்துவதற்கு மனித உரிமைகள் சாசனத்தில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகும்.
மரணதண்டனையே மனித உரிமை ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத போது உடல் உறுப்பு ஒன்றை ஊன ப்படுத்துதல் எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை.
இரசாயன ஆண்மை நீக்கம் எப்படிப்பட்டது?
இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்றால் என்ன என்பதற்கு இணையங்களில் விளக்கம் தரப்பட் டுள்ளது. அதாவது, பாலியல் உண ர்வை தூண்டும் ஆன்ட்ரோஜன், ஹார்மோனுக்கு எதிராக அல்லது செயலிழக்க செய்வதற்காக சைப்ரோடெ ரோவ் அசிடேட் மெட் ரோசைப்ரோ ஜெஸ்ட்ரோன் போன்ற மருந்துகளை ஆண்களுக்கு செலுத்துவது ஆகும். இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீதம், ஒரு ஆண்டுக்கு செலு த்த வேண்டும்.
இதன் பிறகு அந்த ஆணுக்கு பாலி யல் இச்சையோ வன்முறை சிந்த னையோ ஏற்படாது. ஆனால் இதில் இன்னொரு ஆபத்து இருக்கிறது. இந்த மருந்தை பெற்றவர் மாற்று மருந்து கொடுத்து மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்தலாம். அதாவது பாலியல் உணர்வு ஏற்படும் நிலையை உருவா க்கலாம்.
எனினும் இதற்கு பல பக்க விளை வுகள் உள்ளன. அதாவது இம்மருந்தை பயன்படுத்துபவருக்கு நாளாக நாளாக இதய நோய், எலும்பு உதிர்தல் போன்ற நோய் ஏற்படலாம்.
சில ஆண்களுக்கு பெண்களைப் போல் மார்பகம் வளர்ச்சி அடையலாம். முடிகள் உதிரும் இருப்பினும், அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தண்டனை சட்டப்பூர்வமாக பின்பற்றப்படுகிறது.
இந்தியாவில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வெளிச்சத்துக்கு வந்த மேற்படி சம்பவம் ஒன்று தான் பலமாக பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் தினமும் பெண்கள் மீதான பலாத் காரங்களும் வன்முறைகளும் அரங் கேறிக்கொண்டுதான் உள்ளன.
எனவே இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொன்னது போல முழு இந்திய தேசமும் மலர்ந்துள்ள புத்தாண்டை பெண்களின் பாதுகாப்புக் கான ஆண்டாக அர்ப்பணிக்க வேண் டும். பெண்களுக்கான பாதுகாப்பை 100 வீதம் எட்டும் வரை இந்தியா சட்டங்கள், மாற்றங்கள் நடவடிக்கைகள் என கடுமையாக உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
-தினகரன்
Leave a comment