காத்தான்குடி பஸ் டிப்போவிற்குச் சொந்தமான பஸ் ஒன்று 05.01.2013 சனிக்கிழமை அதி காலை வீதியை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது. புதிய காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) விடுதி முன்பாக மேற்படி பஸ் வந்து கொண்டிருக்கையில் எதிரே கனரக வாகனம் ஒன்று வருவதினை அவதானித்த சாரதி அந்த வாகனத்திற்கு (சைட்) இடம் கொடுப்பதற்காக முற்பட்ட வேளையினில் தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றதாக பொது மக்கள் தெரிவித்தனா்.
காத்தான்குடி டிப் போவிற்கு மிகக் கூடுதலான வருமானத்தினை ஈட்டிக் கொடுக்கின்ற பஸ்களில் பிரதானமான ஒன்றாக இந்த மண்முனை – மட்டக்களப்பு ஆஸ்பத்திரி பஸ் காணப்படுகிறது. காரணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளை பார்வையிட தினமும் நுாற்றுக்கனக்கான பொது மக்கள் இந்த பஸ்ஸினையே பயன்படுத்தி வருகின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Leave a comment