நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மணல் கலப்படம் செய்யப்பட்ட 1,88,750 கிலோ சிவப்புச் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு சேதவத்தையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான களஞ்சிய சாலையொன்றை சுற்றிவளைத்த போதே இறக்குமதி செய்யப்பட்டிருந்த இந்த கலப்படம் செய்யப்பட்ட சீனி மூடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்த சீனியின் மாதிரி அரச இரசாயன வியல் பிரிவிற்கு பரிசோதனைக்காக வழங்கப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக அமைச்சு தெரிவித்ததும் இதற்கிணங்க சீனியில் மணல் கலப்படம் செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான் டோவின் பணிப்புரைக்கமைய பண்டிகைக் காலங்களில் விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. அரச நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி செயற்பட்டால் பாரபட்சமின்றி அதற்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்
Leave a comment