– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப் பெறுக்கினால் பாதிக்கப்படும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாறுஸ்ஸலாம் பகுதிக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.முஸம்மில் தலைமையிலான குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு விஜயம் செய்த பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேசத்தை பார்வையிட்டதோடு அப்பிரதேச மக்களிடம் வெள்ள நிலைமைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தனர்.
குறித்த பிரதேசத்திற்கு விஜயம் பிரதேச செயலாளர் மற்றும் செயலக அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்த அப்பிரதேச பொது மக்கள்; பல வருடங்களாக மாரி மழை காலங்களில் இப்பிரதேசம் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் ‘குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாயல்’பாலர் பாடசாலை’மத்ரசா என்பன இருப்பதாகவும் அதற்கு செல்லும் மாணவ மாணவி;கள் ‘பொது மக்கள் பல அசௌகரியங்களுஞக்கும் இன்னல்களுக்கும் ஆளாகுவதாகவும் இவ் வீதியிலுள்ள மழை நீரை வடிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்’இவ் வீதியை உடனடியாக புனரமைக்குமாறும் அப்பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டனர்.
-படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.








Leave a comment