ஜனாஸா அறிவித்தல்

janasaதகவல்: மகன் M.H. சத்ரி.

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவினில் வசித்து வந்த சகோதரா் M.ஹனீபா அவா்கள் ( முன்னாள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) 04.01.2013 வெள்ளிக்கிழமை பி.ப. 02.00 மணியலவில் காலமானார்கள். இன்னாலிலாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி (பிரதியமைச்சா் ஹிஸ்புல்லாவின் தாயார் வீட்டுக்கு முன்னாள்) வசித்து வந்த சகோதரா் M. ஹனீபா அவா்கள்  மூன்று  பிள்ளைகளின் தந்தையாவார்.

மிகச்சிறந்த மார்க்கப் பற்றுள்ள அன்னார்,  மௌலவி அல்.ஹாஜ். M.மஹ்மூத் (பலாஹி) அவா்களின் சாச்சப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் தொழுவிக்கப் பட்டு,  காத்தான்குடி 5,  மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மேட்டு நில மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறைவுக்கு எமது உள்ளுர் மற்றும் கடல் கடந்து வாழும் வாசகர்கள் சார்பாக அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது சுவன வாழ்வுக்காகப் பிரார்த்திக்கின்றோம்.

Published by

Leave a comment