“உயிர்வாழ ஆசைப்படுகிறேன்; என்னைக் காப்பாற்றுங்கள்…!”

f1301041[1]‘நான் உயிர் வாழ ஆசைப் படுகிறேன். என் னைக் காப்பாற்றுங்கள், குற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள்’ டெல்லியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உருக்கமான வேண்டுகோள், இந்தியாவை மட்டுமல்லாமல் உலக அரங்கு, ஐ.நா. சபையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

முழு இந்தியாவுக்குமே தலைகுனிவை ஏற்படுத்திய வெறியர்களுக்கு வழங்கும் தண்டனை இனிமேல் பெண்களை வல்லுறவுக்குட்படுத்த நினைக்கும் அனைவருக்குமே பாடமாக அமையவேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் கோஷம் எழுப்பத் தொடங்கி யுள்ளனர்.

ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்காக இந்திய தேசம் காமுகர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டங்களை கடு மையாக்க தீர்மானித்துள்ளது.

இந்திய தேசத்தையே அதிர வைத்துள்ளது. இதன் விளைவாக காமுகர்களின் வெறியாட்டங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முழு இந்திய தேசமே கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

இந்திய தேசமே வெட்கித்தலை குனியவேண்டிய அவமான சின்னமாக இந்த சம்பவத்தை குறிப்பிடும் பெண்ணியல்வாதிகள், இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தி வீதிகளில் இறங்கியுள்ளனர்.

கொடூரம் – துயரம்

15.12.12 அன்று இரவு தெற்கு டெல்லியில் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், இவர் தன் நண்பரான கணனி மென்பொருள் பொறியியலாளர் ஒருவருடன் திரையரங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திரைப்படத்தை பார்த்து ரசித்துவிட்டு இவர்கள் வெளியேவந்த பொழுது நேரம் இரவு 9.30 ஆகிவிட்டது. வீடு திரும்ப நினைத்த அவர்களுக்கு கண்ணில் பட்டது அந்த தனியார் பஸ். இப்படியெல்லாம் நிகழும் என நினைத்துகூட பார்க்காத அவர்கள், எந்த ஒரு தயக்கமும் இன்றி அதில் ஏறிக்கொண்டனர்.

பஸ்சில் ராம்சிங் என்ற ஓட்டுனரும் அவரது சகாக்கள் 5 பேரும் இருந்தனர். பஸ் பயணிக்க தொடங்கியது. பஸ்ஸில் ஏற்கனவே இருந்தவர்கள் போதையில் இருந்தனர். அவர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். நக்கலும் நையாண்டியும் எல்லை மீறிப் போக மாணவியின் நண்பர் அதை தட்டிக் கேட்டார். இதனால் சீற்றமடைந்த அவர்கள் மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கினர். பஸ்சில் இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து தன் நண்பரை கண்மூடித்தனமாக அவர்கள் தாக்குவதை மாணவி நடுத்தார்.

அப்போது மது போதையில் இருந்த அந்த காமுகர்களின் கவனம் மாணவியின் பக்கம் திரும்பியது. அவர்கள் கண் மூடித்தனமாக இரு வரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட மாணவியின் நண்பர் சுருண்டு விழுந்தார்.

இத்தனைக்கும் பஸ்ஸை சாரதி நிறுத்தவே இல்லை. இதையடுத்து பஸ்ஸை நிறுத்தும்படி மாணவி கூச்சலிட்டார் கதறினார் பயனேதும் இல்லை பஸ் நகர்ந்து கொண்டே இருந்தது.

பஸ்ஸில் இருந்த வாலிபர்களின் வெறித்தனம் தணியவில்லை. மாண வியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இரத்தம் பீறிட்டது. வலி தாங்க முடி யாமல் மாணவி சுருண்டு விழுந்தார்.

அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மாணவியை காம வெறியர்கள் ஆறு பேரும் ஈவு இரக் கமின்றி மாறி மாறி தம் இச்சைக்கு இரையாக்கிக் கொண்டனர்.

இத்தனைக்கும் அந்த பஸ் டெல்லி நகர சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தது. பஸ்ஸில் மாணவி சின்னாபின்னமாக்கப் பட்டார். காம இச்சையை தீர்த்துக் கொண்ட அவர்கள் அதே நாள் இரவு 10.35 மணியளவில் ஓடும் பஸ்ஸில் இருந்து மாணவியையும் அவரது நண்பரையும் சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றனர்.

சாலையோரத்தில் இரத்த வெள் ளத்தில் கிடந்த இருவரையும் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பொலிஸ் விசாரணை

வைத்திய சாலையில் அறிவு, நினை வற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு அங்கு செயற்கை சுவா சத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இதன் போது இவர்களுக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. சம்பந்தப்பட் டவர்கள் பற்றிய விவரமும் பொலிஸா ருக்கு கிடைத்தது. இந்த காமவெறியா ட்ட சம்பவம் தொடர்பான செய்திக ளால் ஏற்பட்ட பரபரப்பினை தொடர் ந்து உஷாரடைந்த டெல்லிப் பொலி ஸார் மறுநாள் 17.12.2012 தனிப்படை கள் அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

இந்த கொடூரச் செயலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் பஸ் சாரதியுமான ராம்சிங்கை பொலிஸார் 18.12.2012 கைது செய்தனர். சம்பவத் துக்கு பயன்படுத்தப்பட்ட பஸ்ஸ¤ம் சிக்கியது. உரிய உரிமம் இல்லாமல் அந்த பஸ் சேவையில் ஈடுபடுத்தப் பட்டதும் தெரியவந்தது.

–தினகரன்

Published by

Leave a comment