கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு

 – பழுலுல்லாஹ் பர்ஹான்

கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (01.01.2013) காலை மாநகர முன்றலில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் முதல்வர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அத்தோடு முதல்வர் ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கைலாகு கொடுத்து புத்தாண்டு வாழ்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி எச்.என்.எம்.றம்சீன், மாநகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.நபார், ஏ.விஜயரட்னம் மற்றும் உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment