தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்கள்

MPj034152200001[1]102 தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக அதிபர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன குறிப்பிடுகின்றார்.

அதிபர் தரம் ஒன்றில் உள்ளவர்களையே புதிதாக சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

கடந்த காலங்களில் புதிதாக அதிபர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையில் தாமதம் நிலவியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment