தெரிய வேண்டிய விடயங்கள்…
பரீட்சைத் திணைக்களத்தின் ரகசிய அச்சகப் பிரிவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பலவீனமாக இருந்ததாக ரகசிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தப் பிரிவின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்பு சீராக செயற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் அந்தப் பாதுகாப்பு செயற்பாட்டிற்காக கோடிக் கணக்கான ரூபா செலவில் சீ.சீ.டி.வி. கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விசேடமாக ரகசிய அச்சகப் பிரிவின் கெமராவை தினமும் பரீட்சிக்க வேண்டும். எனினும் அந்த கெமரா அவ்வாறு பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கவில்லை.
ரகசிய பிரிவுக்கு அது தொடர்பில் விசேட அனுமதிபெற்ற அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் மட்டும் தான் செல்ல முடியும். மேலும் அங்கு பிரவேசிப்போரும் அங்கு இருந்து வெளியில் வருவோரும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்தப் பிரிவுக்குள் தொலைபேசி பென்ரைவ், கடதாசி, பேனா உட்பட அநேகமானவை கொண்டு செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் வெளியான நாளன்று சீ. சீ. டி. வி. கெமரா தொகுதி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவர் வெளியில் செல்வதற்கு முன் பாதுகாப்பு பிரிவில் அவரை பிடித்திருக்கக் கூடும்.
ஆனால் அங்கு நிலவிய பலவீனமான நிலையால் சந்தேக நபருக்கு வினா பத்திரத்தை கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது.
அந்த வினாத்தாள் பிள்ளைகளின் கைகளுக்கு கிடைக்கும்வரை பரீட்சை திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவுக்கு அது தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சந்தேக நபர்கள் தொலைபேசியை அந்த பிரிவுக்குள் கொண்டு சென்று இருப்பது அவர்கள் பரீட்சிக்கப்படாததால் ஆகும்.
சீ.சீ.டி.வி. கெமரா பொருத்தப்படுவதற்கு முன் பரீட்சை திணைக்களத்தில் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட சேவையாளர்கள், வினாத்தாள் பிள்ளைகளுக்கு வழங்கும் வரை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள். அவர்களை முழுமையாக பாதுகாப்பது திணைக்களத்துக்குரிய பொறுப்பாகும் என மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
-தினகரன்
Leave a comment