– பிராந்திய செய்தியாளர்.
ஏறாவூர் அய்யன் கேனியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் (CTB) சாரதியாக பல வருடங்கள் கடமையாற்றி வந்த சகோதரா் முகம்மது நயீம் என்பவா் இன்று ( 28.12.2012 வெள்ளிக் கிழமை ) காலை காலமானார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.)
சகோதரா் முகம்மது நயீம் அவா்களின் மரணச் செய்தி பலரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. இவா் காத்தான்குடி பஸ்டிப்போவிலும் பல வருடங்கள் சாரதியாக கடமையாற்றி வந்துள்ளார். மக்களின் நன்மதிப்பினைப் பொற்ற அன்னார் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அல்லாஹ் அவரது சமூக அக்கறையை ஏற்று பாவமன்னிப்பை வழங்கி அன்னாருக்கு சுவர்க்கத்தை வழங்க எமது இணையத்தளம் சார்பாக பிராத்திக்கின்றோம்.
அவரது பிரிவால் துயரடையும் அன்னாரது குடும்பத்தாருடன் உங்கள் காத்தான்குடி உம் அதன் வாசகர்களும் பங்கெடுக்கின்றனர்.
Leave a comment