ஜனாதிபதிக்கு இந்திய உயர் விருது வழங்க கோரிக்கை

sing_200_150[1]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்ன விருதினை வழங்குமாறு இந்திய மக்கள் கட்சி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புலிப்படையினரின் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்து முழு உலகத்துக்கும் ஒருமுன்மாதிரியைக்காட்டிய தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார் என்றும் இந்திய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

எனவே இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்ன விருதினை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு தலைவர் கலாநிதி சுப்ரமணி சுவாமி இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment