மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் திறந்து வைத்தார்
நாடளாவிய ரீதியில் 24 மணிநேரமும் சிறந்த (கேப்) வாடகை வாகன சேவைகளை வழங்கும் கே.கே.எஸ். லங்கா டரவல்ஸ் அன் டுவர்ஸ் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் 70-51 –சுப்ரமணியம் வீதி, கருவப்பங்கேனி, மட்டக்களப்பு என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரனினால், கே.கே.எஸ்.லங்கா ட்ரவல்சன் ட்டுவல்ஸ் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் வைபவரீதியாக திறக்கப்பட்டு சேவைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இங்கு 24 மணி நேர (கேப் )வாடகை வாகன சேவை மற்றும் வி.ஐ.பி. முக்கியஸ்தர்களுக்கான சேவை, திருமண சேவைக்கான சிறந்த கார் சேவை, சொகுசு வாகன சேவை போன்ற வாடகை வாகன சேவைகள் இடம்பெறுவதாக கே.கே.எஸ்.லங்கா ட்ரவல்சன் ட்டுவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் நளின் குணம் வேலுப்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 0712113377 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.


Leave a comment