உலக கிரிக்கட் வீரர்களுள் அதி உயரமான வீரர் இர்பான்!

mohammad_irfan_and_fawad_alam_pakistan_cricket_tallest[1] -MJ

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் புதிய பந்து வீச்சாளர் முகம்மட் இர்பான், உலக கிரிக்கட் வீரர்களுள் அதி உயரமான வீரர் என்ற சாதனையுடன் தற்பொழுது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றார்.

முப்பது வயதுடைய வேகப்பந்து வீச்சாளரான இர்பான், 7 அடி, 1 அங்குலம் உயரம் கொண்டவர். கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களுரில் இடம்பெற்ற இந்தியாவுடனான முதலாவது இருபது20 போட்டியில் தனது கன்னிப் போட்டியை ஆரம்பித்த இர்பான், இந்திய வீரர்களுக்கு பவுஸர் பந்துகளை வீசி, தனது  கண்களால் சாடைசெய்து எச்சரித்தார்.

‘இந்திய வீரர்கள் இர்பானின் பந்துகளுக்கு சிரமத்துடன் முகம் கொடுப்பதை தான் உணர்வதாக’ முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஸீம் அக்ரம் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

ஓர் வீரரின் திறமைகளை ஓரிரு போட்டிகளை வைத்து கணிப்பிட முடியாது. இர்பான் இந்தியாவுடனான ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தனது சாகசங்களை இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்குக் காண்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தவகையில் உலகில் அதி உயரமுடைய கிரிக்கட் வீரர்கள் பட்டியலில்

Muhammad Irfan (Pakistan)              7’.1”
Joel Garner (West Indies)                   6’.8”
Bruce Reid (Australia)                         6’.8”
Curtely Ambrose (West Indies)         6’.7”
Tom Moody (Australia)                       6’.7”
Jacob Oram (New Zealand)               6’.6”
Abey Kuruvilla (India)                        6’.6”
Peter Fulton (New Zealand)              6’.6”
Morne Morkel (South Africa)            6’.5”
Ishant Sharma (India)                        6’.5’

ஆகியோர் காணப்படுகின்றனர்.

Published by

Leave a comment