மின் கட்டணம் செலுத்தத் தாமதமாவதற்கு யார் காரணம்?

CEBநமது செய்தியாளர்.

புதிய காத்தான்குடியில்  பல இடங்களில்  மின் கட்டண பட்டியல் வந்துசேர தாமதமாவதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி பிரிவு மாதாமாதம் மக்களிடம் கொடுக்க வேண்டிய மின் கட்டண  பட்டியலை காலம் தாழ்த்தி கொடுத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக புதிய காத்தான்குடி பகுதியின் பல இடங்களில்  இரண்டு மாத காலமாகியும் மின் கட்டண  பட்டியல் வராமையால் பொது மக்கள் பெரும் கவலையுடன் இருப்பதாக அறியமுடிகின்றது.

இது தொடா்பாக இலங்கை மின்சார சபையின் ஊழியா் ஒருவரிடம் வினவிய போது, காத்தான்குடியில் கடமை புரிந்த மாணி வாசிப்பாளர்களில் அதிகமானவா்களுக்கு  இடமாற்றம் வந்துள்ளதாகவும் , புதிதாக வந்துள்ள மாணி வாசிப்பாளர்களுக்கு சரியாக  இடம் தெரியாமையுமே ‘பில்’ வர தாமதத்திற்கு காரணம் எனத் தெரிவித்தார்.

மக்களின்  பொருளாதாரச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமே உள்ளது.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் வியாபாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கூலித்  தொழில் செய்பவா்களின் நிலை அதனை விடவும் மோசமாகவே உள்ளது. வருமானம் குறைவாக உள்ள  போதிலும் செலவினம் மிக மிக கூடுதலாகவே உள்ளது.  இவ்வாறான சூழலில் மின் கட்டனம் தாமதம் ஆகும் போது செலுத்தும் தொகை கூடுதலாக செலுத்த வேண்டி ஏற்படும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Published by

Leave a comment