நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினுடைய வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் N. சசிதரன் அவர்கள் காத்தான்குடி 5 சின்னப் பள்ளிவாயலுக்கு அருகாமையில் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ள வடிகானைப் பார்வையிட்டார்.
மேற்படி வடிகானானது சுமார் ஆறு மாத காலத்திற்கு மேலாக திருத்த வேலைகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததை அவதானித்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ்விடயத்தினை கடந்த 05.06.2012 அன்று வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தெரியப்படுத்தி இருந்தது.
இவ்வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சமூகம் தந்த பொறியியலாளர்கள் இவ்வடிகானானது காத்தான்குடி நகரசபையின் நிர்வாக எல்லைக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து இவ்விடயத்தினை காத்தான்குடி நகரசபைக்கு தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொண்டார்கள்.
இதனிப்படையில் இவ்விடயம் சம்பந்தமாக பல்வேறு கூட்டங்களிலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை உறுப்பினர்கள் தெரியப்படுத்தியபோதும் அவர்கள் இவ்விடயத்தை இழுத்தடிப்பு செய்தனர். அதன் பின்னர் PMGG தனது நிதியிலிருந்து மேற்படி வடிகானை சீரமைப்பதற்கு 11.12.2012ம் திகதி காத்தான்குடி நகரசபையின் அனுமயிதினைக் கோரியிருந்தது.
தனது அதிகாரதிற்குட்பட்ட வீதிகள் எது என்பதனைக் கூட தெரியாத நகரசபைத் தவிசாளர், மேற்படி வடிகானானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரியது எனவும் இதனை சீர் செய்வதற்கு “தயட்ட கிருள” திட்டத்தின் கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இவ்விடயத்தினை இன்று 26.12.2012ம் திகதி மீண்டும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கொண்டு சென்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், இதன் அவசியம் தொடர்பில் அதிகார சபையின் பொறியியலாளருக்குத் தெரியப்படுத்தியபோது உடனடியாக இவ்விடத்துக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சாபையினர் மேற்படி காத்தான்குடி நகரசபையினுடைய நிர்வாக எல்லைக்குட்பட்டிருந்தாலும்கூட அப்பிரதேச மக்களின் நன்மை கருதி இவ்வடிகானை தற்காலிகமாக மிக விரைவில் செப்பனிட்டு தருவதாகவும் பொறியியலாளர் N. சசிதரன் உறுதியளித்தார்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.





Leave a comment