பாகிஸ்தானுடன் நேற்று நடந்த டி20 போட்டியின்போது பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஒடிஷாவைச் சேர்ந்தவர் கமல் ஜெயின். 47 வயதான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று இரவு பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்தார்.
பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா பந்தாடி வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் படு உற்சாகமாக போட்டியைக் கண்டு கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் கமல் ஜெயினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சமயத்தில் 18வது ஓவர் இருக்கும்போது திடீரென கமல் ஜெயினுக்கு நெஞ்சு வலித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார் என்றார்.
-lankasri
Leave a comment