டெல்லி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில்

121226141718_india_512x288_afp[1]

பாலியல் வல்லுறவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெயர் விபரங்கள் வெளியிடப்படாத அந்த மாணவியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக விமான அம்புலன்ஸ் மூலமாக புதன்கிழமை இரவு அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்திய அரசு விசா பெற்றுக் கொடுத்துள்ளது. ஏற்கனவே அவர் அனுமதிக்கப்பட்டிருந்த புது டெல்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் இது குறித்து கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் நிலை சற்று முன்னேறியதாக தகவல் கூறப்பட்டது. அவரிடமிருந்து காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

-BBC/Tamil

Published by

Leave a comment