பின்புலம் :
■போருக்குப் பின்னரான உள்நாட்டு அரசியல் நகர்வுகள்.
■மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பூகோள அரசியல் மற்றும் இராஜதந்திரமும் உளவுச் சக்திகளின் தொழிற்பாடுகளும்.
■முஸ்லிம் அரசியல்வாதிகளின் சாணக்கியமின்மையும் சரணாகதி அரசியலும்…அவர்கள் தீர்வின் ஒரு பகுதியாகவன்றி சவால்களின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளமை.
■முஸ்லிம் சமூகத்திற்கான நன்கு ஆராயப்பட்ட மூலோபாய தேசிய மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலின்மை…
■முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளை சரியான பரிமாணங்களில் கையாளத் தெரியாமையினால் புரையோடிப்போயுள்ள வேற்றுமைகளும் பிளவுகளும் பிணக்குகளும் எமது அரசியல் சமூக கலாச்சார கனதியை மதிப்பிழக்கச் செய்துள்ளமை.
■கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவி வந்த இன ரீதியிலான அடையாள அரசியலும்இ இன ரீதியிலான பாகு பாடுகளும் இனங்களுக்கிடையில் ஆழமாக வேரூன்டியுள்ள தப்பபிப்பிராயங்களும் சந்தேகங்களும்.
தீர்வுகள்:
■பலதரப்பு பிரதிநிதிகளையும் கொண்ட தலைமைத்துவ கட்டமைப்பொன்றை நாம் ஏற்படுத்திக் கொள்ளல்.
■முஸ்லிம் சமூகத்திற்கான சவால்களாக இவற்றை பார்க்காது மொத்த தேசத்தினதும் சமாதான சகவாழ்வுக்கான அச்சுறுத்தலாக அணுகுதல்.
■அரச உயர் மட்டத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தல்.
■பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் மதத் தலைமைகளை அணுகி நியாய தர்மங்களிற்கான அவர்களது ஆதரவைப் பெறுதல்.
■அத்துமீறல்களை கையாள்வதற்கான ஒரு சட்ட ஆலோசனைக் குழுவையும் அவ்வப்போது தேர்ச்சிபெற்ற முஸ்லிம் முஸ்லிமல்லாத சட்டத் தரணிகளின் சேவைகளை நாடு தழுவிய மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கான நிதியம் ஒன்றை தாபித்துக் கொள்ளல்.
■இந்த சவால்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் இராஜ தந்திர நகர்வுகளை இனம்கண்டு அவற்றை அரசியல் மற்றும் இராஜ தந்திர வழிமுறைகளில் முறியடித்தல்.
■தேசிய ஊடகங்களில் இன நல்லுறவை வளர்த்தெடுப்பதில் அக்கறையுள்ள பெரும்பான்மையின அரசியல் வாதிகள் மதத் தலைவர்கள் கல்விமான்கள் எழுத்தாளர்களைக் கொண்டு தீய சக்திகளின் பிரச் சாரங்களை முறியடிக்க மேற்கொள்ளல்.
■இந்த நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பொருளாதாரம் மதம் கலாச்சாரம் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் மற்றும் தேசிய வாழ்வில் அவர்களது பங்களிப்பு குறித்த சமூகம் சார்ந்த மூலோபாய திட்டமிடல் ஒன்றை மேற்கொள்ளல்.
■ இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாறு தேசத்திற்கான பங்களிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு சகோதர இன புதிய தலைமுறையினரை அறிவுறுத்தல்.
■தேசிய சமூக அரசியல் பொருளாதார வாழ்வில் முஸ்லிம்களது அணுகுமுறை நடத்தைகளை மீளாய்வுக்கு உற்படுத்தல்.
■முஸ்லிம் உலகுடனான தொடர்புகளை வலுப்படுத்தி எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதோடு தேசத்திற்கான பங்களிப்பையும் செய்தல்.
சவால்களுக்குப் பின்னல் உள்ள சந்தர்ப்பங்கள்:
■வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான இலக்குகளில் உடன் படுகின்ற உயரிய பண்பாட்டை இந்த சமூகம் வளர்த்துக் கொள்ளல்.
■இந்த நாட்டு முஸ்லிம்களுக்கான நன்கு ஆராயப்பட்ட சிவில் மற்றும் அரசியல் தலைமைக் கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ளல்..
இந்த நாட்டு முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார கல்வி கலை கலாச்சார மற்றும் இன்னோரன்ன துறைகளிலான வாழ்வினை வளப்படுத்துகின்ற தேசத்திற்கான நமது பங்களிப்பை வடிவமைக்கின்ற மூலோபாய திட்டமிடல்களை மேற்கொள்ளல். இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் நிலவுகின்ற விஷமப் பிரச்சாரங்களினை முறியடித்து தப்பபிப்பிராயங்களையும் களைதல். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதோடு சமாதான சகவால்விற்கான சரியான அடித்தளங்களை இடுதல். முஸ்லிம் உலகுடனான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுதல். இஸ்லாமிய கலநிலயங்கள் தவா அமைப்புக்களின் பரப்புக்களை பன்முகப்படுத்தல். சிவில் சமூகத்தை வலுப்படுத்தல்
Leave a comment