விஞ்ஞான வினாத்தாளை திருடிய லிதோ இயக்குனர் வாக்கு மூலம்
பரீட்சை வினாத்தாளை அச்சிடும் போது அச்சு இயந்திரத்தில் சிக்கிய பல வினாப் பத்திரங்களை வெளியே எடுக்க முயற்சி செய்கையில் ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாளின் இரு துண்டுகள் தமது கைகளில் கிடைத்ததாக பரீட்சை திணைக்கள அச்சகத்தில் லித்தோ இயந்திர இயக்குனர் இரகசியப் பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கையில் சிக்கிய துண்டுகளை மடித்து காற்சட்டைப் பையில் போட்ட பின் னர் அந்தத் தாளைப் பார்த்த போது விஞ்ஞான வினாப் பத்திரத்தில் 19 வினாக்கள் அதில் இரு ந்தமை தெரிய வந்ததாகவும் சந்தேக நபர் கூறி யுள்ளார்.
தனது நண்பரான இளைப்பாறிய இரா ணுவ அதிகாரிக்கு இது பற்றித் தெரிவித் தேன். பின்னர் அதனை அவர் எடுத்துச் சென்றார். அவரிடமிருந்து இதற்கு நான் பணம் எதுவும் பெறவில்லை. அவர் இதனை டியூஷன் ஆசிரியர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாவுக்கு விற்றதாக பொலிஸாரிடம் அகப்பட்ட பின்னரே நான் அறிந்தேன்.
இது பற்றி இளைப்பாறிய இராணுவ வீரர் நைவல சந்தியில் சிகை அலங்கார நிலைய உரிமையாளருக்கு அறிவித்தார். இதனை விற்று பணம் பெறுவேமென யோசனையும் தெரிவிக்கப்பட்டது.
சலூன் அமைந்துள்ள கட்டடத்தில் மேற்பகுதியில் டியூஷன் வகுப்பு நடத்தும் நண்பர் ஒருவருக்கு சலூன் உரிமையாளர் இதனைத் தெரிவித்தார். ரூபா 25,000 பணம் கொடுத்து வினாத்தாளைப் பெற்ற அவர் மீதி 75,000க்கு திகதியிடப்பட்ட காசோலையையும் கொடுத்துள்ளார்.
அக்காசோலையையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். அச்சக ஊழியர், டியூஷன் ஆசிரியர், இளைப்பாறிய இராணுவ அதிகாரி, சலூன் உரிமையாளர் உட்பட ஐவர் கைதாகியுள்ளனர். இவர்கள் விளக்க மறியலில் வைக்கப் பட்டனர். (எப்.எம்)
பரீட்சைகளில் இரகசியத்தன்மையை பாதுகாக்க விசேட திட்டங்கள்
இதேவேளை, பரீட்சைகளில் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக விசேட திட்டங்கள் உடனடியாக அமுலாகிறது. பரீட்சைத் திணைக்களத்திலுள்ள சீ.சீ.ரீ.வீ. கமெரா வலையமைப்பு விஸ்தரிக்கப்படும். இரகசிய அச்சுப் பிரிவின் ஊழியர்கள் எதனையும் மறைத்து வைத்துக் கொண்டு செல்ல இயலாத வகையிலான புதிய சீருடையும் அமுலாக உள்ளது.
இப்பிரிவில் பணியாற்றும் மங்கள முனசிங்க என்ற ஊழியரின் சம்பளம் நிறுத்தப்படும். பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் அனுமதி இன்றி இவர் நாட்டை விட்டு வெளியேறவும் இயலாது. இவர் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவர் சேவையிலிருந்தும் விலக்கப்படுவாரெனத் தெரிகிறது.
பரீட்சை திணைக்கள ஊழியர் மீது இருந்த நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது. இனிமேல் நம்பிக்கை அல்ல. சட்டப் பிரகாரமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.
-தினகரன்
Leave a comment