நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வருடாவருடம் நடைமுறைப்படுத்தி வரும் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் வேலைத்திட்டத்தில் இவ்வருடத்திற்கான அப்பியாசக்கொப்பி விநியோக அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 27.12.2012 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தொடர்ச்சியாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வுகளில் சுமார் 8000 வறிய தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை PMGGயின் கல்விப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை இம்முறை ஏறாவூர், கல்குடா, திருகோணமலை, மூதூர், கிண்ணியா மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களிலுள்ள வறிய மாணவர்களுக்கும் இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இந்த இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலவச அப்பியாசக் கொப்பி விநியோகம்-2012
Leave a comment