‘ஹலால்’ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேரர்களுடன் மதுபானசாலைகளில் வேலைசெய்வோரும் பங்கேற்பு: ஜம் இயத்துல் உலமா சபைக்கு 100 கோடி வருமானமாம்

Halaal%20Identify[1]ஹலால் உத்தரவாதத்துடன் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பகிஷ்கரிக்கவும் அப்பொருட்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஹலால் உத்தரவாத்தையும் ரத்து செய்யவும் கோரி ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் மற்றும் எம்பிலிபிட்டிய நகரசபை தலைவர், வேவல்துட்டுவ, ஞான பிரபா தேரர் உள்ளிட்ட ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தேரர்களுக்கு மேலதிகமாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் மதுபானசாலைகளில் வேலைசெய்வோரும், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

ஹலால் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக ஜம் இயத்துல் உலமா சபைக்கு குறைந்த பட்சம் 175,000 ரூபா வழங்கப்படுவதாகவும் இந்த தொகை மிக விரைவில் ஒரு மில்லியனை நோக்கி அதிகரிக்கப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் சுமார் 4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் உள்ளதாகவும் அதனால் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபைக்கு 100 கோடி வரையில் வருமானம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-வீரகேசரி

Published by

One response to “‘ஹலால்’ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேரர்களுடன் மதுபானசாலைகளில் வேலைசெய்வோரும் பங்கேற்பு: ஜம் இயத்துல் உலமா சபைக்கு 100 கோடி வருமானமாம்”

  1. panam anraal punamum pesum karaam kalaal patthi alle pirachinai 100 koodythane pirachinai.

Leave a comment