முகவர் நிறுவன அனுமதிப்பத்திரங்கள் ரத்து

z_p05-Agency[1]வெளிநாடு செல்பவர்களுக்கு முறையான சேவைகளை வழங்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்யப்படும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ‘நாட்டின் வீரர்கள் அமைப்பின்’ கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தை அறிவித்தார்.

அண்மைக்காலமாக முறையாக ஒப்பந்தங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு பணியாளர்கள் அனுப்பப்படுவதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். சிலர் தமது வாழ்க்கையை இழக்கக் கூடிய சூழ்நிலையை இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் இலங்கையர்களின் குடும்பத்தினர் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் நாட்டின் வீரர்கள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடு செல்பவர்களுக்கு முறையான சேவைகளை வழங்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்வதற்கு மேற்படி அமைப்பினூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment