-MJ
இன்று அவஸ்திரேலிய நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
டிசம்பர் 26, ‘பொக்ஸிங் டே’ என உலக வழக்கில் அழைக்கப்படுவது வழக்கம். இந்த ‘பொக்ஸிங் டே’ தினத்தில் அவுஸ்திரேலியாவில் அதுவும் மெல்போர்ன் மைதானத்தில் ஓர் கிரிக்கட் போட்டி நடைபெறவது கிரிக்கட் வரலாற்றில் உள்தொன்றாகும்.
இலங்கையின் புலம் பெயர்ந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து இலங்கை அணி மைதானத்துக்குள் வந்து சேரும் வாயிற்கதவில் நின்று, இலங்கை கிரிக்கட் அணிக்கும், இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் எதிரான ஓர் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தத் திட்டமிட்டிருப்தாக அவுஸ்திரேலிய பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருக்கின்றன.
விக்டோரியா பொலிஸ் மேலதிகாரி ‘ரொட் வில்சன்’ இதுபற்றிக் கூறுகையில்,
‘எங்களுக்கு இவ்வாறான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த காலங்களிலும், இலங்கையில் யுத்தம் நடைபெற்றிருந்த காலப்பகுதிகளிலும் தாங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களையும், கண்டனங்களையும் எதிர்நோக்கி இருக்கின்றோம். எனவே போட்டிக்கு எவ்வித பாதமும் இருக்காது. மைதானத்திற்குள் நுழையும் சந்தேகத்துக்கிடமானவர்கள் விசாரிக்கப்படுவார்கள். கலகம் விளைவிக்க எத்தனிப்போர் கைது செய்யப்படுவார்கள்’
என்றும் கூறினார்.
முதலாவது நாள் ஆட்டத்தைக் கண்டுகளிக்க 65,000-70,000 இற்கும் இடைப்பட்டோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகின்றன.
தற்பொழுது மெல்போர்ன் மைதானத்தைச் சூழ பொலிசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
Leave a comment