பாலமுனையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் வழங்கப்பட்ட நிவாரணம்

A.M. முகம்மட் தல்ஹா

காத்தான்குடி, பாலமுனை ‘பின் அல் ரஷீத்’ கிராமத்திலுள்ள 45 வீடுகளில் வசிப்போருக்கான நிவாரணக் கொடுப்பனவு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் 23/12/2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இக்கிராமத்தில் வசிக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் பொதியிட்டு நிவாரணங்களாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று, அம்மக்களின் தேவைகளையும் அறிந்து கொண்டனர்.

படங்களின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment