தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப் பட்டுள்ளது. சாதாரனமாக அன்றாடத் தொழில் மற்றும் கூலி வேலை செய்பவா்களின் நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறான சூழலில் திருட்டுச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸில் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் காத்தான்குடி 06 ம் குறிச்சியில் ஒரு வீட்டினுல் புகுந்த திருடன் நகை, பணம் என்பவற்றுடன் ஒரு (laptop) மடி கணணி ஒன்றினையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆச்சரியத் தக்க விடயம் என்ன வென்றால் திருடிச் செல்லப்பட்ட கணணியைப் பார்த்து விட்டு அதில் அதிகமான நகைகளைப் போட்டுக் கொண்டு நடமாடிய மற்று மொரு பெண்னுடைய வீட்டுக்குச் சென்று கொள்ளை இட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்தும் அவா்கள் உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற் கொள்ள வில்லையென பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனா்.
‘கொம்பியூட்டா் காலம்’ என்று சொன்னது திருடா்களுக்கும் வசதியாயப் போய்விட்டது போல. பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டப்படுகின்றீா்கள்.

Leave a comment