நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு தாரிகள் உங்கள் பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீா்கள் என்ற அன்னலாரின் அழகிய உபதேசம் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் உறுதியாக இருக்க வேண்டிய மிகப் பெரிய அம்சமாகும்.
ஆட்சி, அதிகாரம், அரசியல், பட்டம், பதவிகள், முக்கியமான பொறுப்புகள் என எதனை நாம் செய்கின்ற போதும் முதலில் அல்லாஹ்வுக்கு பயந்தவனாக, வெளிப்படை தன்மையுடனும், அல் குா்ஆன்/அஸ்ஸூன்னாஹ்வின் வழிகாட்டலிலும் செயல்பட வேண்டும். அந்த வகையில் காத்தான்குடி காழி நீதிபதியாக வருபவா் ஒரு உலமாவாக ஏன் இருக்கக் கூடாது……?
திருமண விடயங்களைப் பொறுத்த மட்டில் உண்மையான தீர்ப்புகள் யாவும் அல் குா்ஆன்/அஸ்ஸூன்னாஹ்விலேயே தங்கியுள்ளது. அப்படியாயின் அதனை சொல்கின்ற ஒருவராக ஓா் உலமாதான் இருக்க வேண்டும் .
எனவே காத்தான்குடி உலமாக்கள் மற்றும் சம்மேளனப் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் பாரபட்சமற்ற விடயங்களைக் கையாண்டு, ஓர் நீதியை வழங்கக்கூடிய ஒருவரை நியமிக்கும்படி அன்புடன் கேட்கின்றேன்.

Leave a comment