சிரேஷ்ட ஊடகவியலாளரும் நாடகக் கலைஞருமான சுஹைர் ஷெரீப் அரசாங்கத்தால் வழங்கப்படும் கௌரவ விருதான 2012ஆம் ஆண்டுக்கான கலாபூசண விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இது தொடர்பான விஷேட நிகழ்வு அண்மையில் கொழும்பு ஜோன் டி சில்வா கலையரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றது.
தினபதி மற்றும் சிந்தாமணி ஊடகங்கள் ஊடாக 1980 முதல் தமது ஊடகப் பணியை ஆரம்பித்த சுஹைர் ஷெரீப், இலங்கை வானொலி ,ரூபவாஹினி ,சக்தி எப்.எம், சக்தி ரி.வி ,வீரகேசரி ,மித்திரன் ,மெட்ரோ நியூஸ் மற்றும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் இணையதளம் எனப் பல ஊடகங்கள் ஊடாக கவிதை கட்டுரை நகைச்சுவைக் கட்டுரை சிறுகதை நாடகம் என தமது ஆக்கங்களை வெளிப்படுத்தி உள்ளார்.
ஊடகத்துறையில் ஈடுபடும் சமகாலத்தில் நாடகத்தறையிலும் ஈடுபட்டு வருகின்றர்.“வட்டம்” ,“தந்தை சொல் தட்டாதே”, “பிடிவாதம்” ,“பணம் எங்கே’ என்பன உட்பட வானொலி தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்கள் பலவற்றை தயாரித்துள்ளதுடன் அவற்றில் பங்கெடுத்து நடித்துள்ளார்.
தமிழ் மொழியில் மற்றுமன்றி சிங்கள மொழி மூலமான “மினிஸ்” நாடகத்தை தயாரித்து மேடையேற்றி உள்ளதுடன் “அம்பு நொபத்தன எக்கா”, “யக் மக் ரஜ“ ,“கெல்கருவோ” உட்படப் பல சிங்கள நாடகங்களில் பங்கேற்றும் உள்ளார். இதேவேளை ,மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு அறிவிப்பாளராகவும் செயலாற்றி வருகின்றார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment