படங்கள்: முகம்மட் ரியாஸ்
தொகுப்பு: MJ
க.பொ.த. சா/த பரீட்சை தற்பொழுது நிறைவடைந்திருக்கின்றது. இப் பரீட்சையின் நேற்றைய இறுதிப்பாடத்தின் பின்னர் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களால் பரீட்சை நிறைவடைந்த மகிழ்ச்சியில் நீல நிற மை கொண்டமைந்த திரவம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கிடையே எறிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டதனைக் காண முடிந்தது. இச் சம்பவம் பற்றி தொகுக்கப்பட்ட அறிக்கையை இங்கு வழங்குகிறோம்.
‘சுமார் 17 வயதுக்கும் குறைவுடைய இளம் மாணவர்களான இவர்களால் நல்லது எது? கெட்டது எது? என பகுத்தறியும் புத்தி இவர்களிடம் இருந்தபோதிலும், ஓர் மகிழ்ச்சி என்ற விதத்தில் இச்செயற்பாட்டை செய்துள்ளனர்’.
என சில பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
‘எனினும் ஓர் பரீட்சை நிறைவடைந்ததும் எமது தேவைகளையும் நல்ல பரீட்சை பெறுபேறுகளையும் இறைவனிடம் பிரார்த்தித்து விடைபெறும் இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாமிய வரையரைக்குள் அப்பாற்பட்டது’
என மார்க்க அறிஞர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
‘பாடசாலைகளில் மிகவும் கண்டிப்பான ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் மாணவர்களே இவர்கள். நாமும் எமது பாடசாலைகளில் இஸ்லாமிய வரையரைக்குள்ளான ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்கவே மாணவர்களை கேட்கின்றோம். அதனையும் வலியுறுத்தி வருகின்றோம்’.
‘மேலும் இடுப்பிற்கு கீழ் இறக்கி தங்களது நீல் காற்சட்டையை அணிந்து வரும் மாணவர்களும், தலைமுடிக்கு பல வர்ண மைகளை நாகரீகமாக பூசிவரும் மாணவர்களையும், காதில் துளையிட்டு பெண்கள் போன்று நகையணிந்து வரும் மாணவர்களையும், சிகையலங்காரம் செய்து வரும் மாணவர்களையும் இந்நாட்டின் சில பாடசாலைகள் அனுமிக்கின்றன’.
‘நாங்கள் பாடசாலை ஒழுக்க விழுமியங்களுக்கிணங்கவும், எமது இஸ்லாமிய சட்டத்திற்கு கட்டுப்பட்டும், இவ்வாறான விடங்களில் மாணவர்கள் ஈர்க்கப்பட்டு திசை திரும்பிடாமலும் எமது மாணவர்களை நல்ல ஒழுக்க சீலர்களாக வழி நடாத்தி வருகின்றோம்’
‘எனவே இது அவர்களின் மகிழ்ச்சியே தவிர, வேறு எந்த நோக்கத்தையும் பாதிப்பையும் அவர்களிடத்தில் கொண்டுவராது’
என மூத்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
‘மாணவர்கள் சினிமாவிலும், மேற்கத்தேய கலாச்சாரத்திலும் ஈர்க்கப்பட்டு திட்மிட்டு திசை திருப்பப்படுகின்ற இத்தருணத்தில், இலங்கையின் பாடசாலை மாணவர்கள், தங்களது பாடசாலை ஒழுக்க விழுமியங்களை செவ்வனே கடைப்பித்தே வருகின்றனர். எனினும் தனியார் கல்லூரிகளினால் பல வழிகேடுகளும், மேற்கத்தேய நாகரிகங்களும் இன்று அரச பாடசாலைகளுக்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றன’.
‘என்னதான் பகிடிவதை பல்கலைக்கழகங்களில் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறிய போதிலும், அங்கு பகிடிவதைகள் இருகக்த்தான் செய்கின்றன. பல்கலைக்கழகம் சென்றால் இவ்வாறான சிக்கல்களையும் இதற்கு மேலான சுமைகளையும் பகிடிவதை என்ற ரீதியில் மாணவர்களும் மாணவிகளும் எதிர்நோக்கியே ஆகவேண்டியுள்ளன’.
எனவே, ஓர் பருவவயதைத் தொடும் இம்மாணவர்களின் இச்செயற்பாடுகள் அவர்களின் பரீட்சை நிறைவடைந்த மிகழ்ச்சியின் ஓர் அங்கமே தவிர வேறொன்றுமில்லை’.
என பல்கலைக்கழக மாணவர் ஓருவர் கருத்துத் தெரிவித்தார்.
அரசாங்க அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்..
‘ஒரு காலத்தில் நாங்கள் பரீட்சை எழுதியதும் டிவி-டெக் என்பவைகளை வாடகைக்கு அமர்த்தி ஓர் காலியான வீட்டில் ஒன்று கூடி படங்கள் பார்ப்போம், சில வேளை சினிமாவுக்கும் போவோம், சாப்பாடுகள் சமைப்போம், கஞ்சி காய்ச்சிவோம். அதே போல் ஜமாஅத்துக்கும் 3 நாள், ஒரு வாரம், 40 நாள் என்று போய்வருவோம். இப்போது மாணவர்கள் பாசிக்குடாவுக்கும், உல்லேக்கும், சினிமாவுக்கும், சுற்றுலா என்றும், பீச்சிற்கு ‘நைட் அவுட் போகின்றனர். இப்போதுதான் பரீட்சை முடிவடைந்திருக்கிறது. அதற்கிடையில் ஏ.எல். படிப்பதற்கான தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இது மாணவர்களின் பரீட்சையின் பின்னரான ஓய்வுக்கு குந்தகம் விளைவிக்கும்; ஒன்றாகவே அமையும். இது பற்றி அரசாங்கமே கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.


Leave a comment