அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்

121221102727_amparaiseasnake_304x171_bbc_nocredit[1]அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கபபட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை கடலோரம் பல்வகை இனப் பாம்புகள் பெரும் எண்ணிக்கையில் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை சிகப்பு, ஊதா மற்றும் கறுப்பு என பல்வகை நிறங்களையும் இனங்களையும் கொண்ட பாம்புகளே இவ்வாறு கரை ஒதுங்கியதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள

காட்டு வெள்ளம் காரணமாக வெள்ளத்தினால் காடுகளிலிருந்து கடலுக்கு அடித்து செல்லப்பட்ட பாம்புகளாக இவை இருக்கலாம் என உள்ளுர் மக்களும் மீனவர்களும் நம்புகின்றார்கள்.

வெள்ளத்திலிருந்து தப்பிய யானைகள், ரெயில் மோதி பலி

இதற்கிடையில் காட்டு வெள்ளம் காரணமாக பொலநறுவ மாவட்டம் மின்னேரியா யானைகள் சரணலாயத்திலிருந்து வெளியேறிய யானை கூட்டமொன்று ரயில் பாதையை கடக்க முற்பட்ட வேளை ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

மேலும் இரு யானைகள் காயங்களுடன் காட்டுக்குள் சென்றுவிட்டதாக வன ஜீவராசிகள் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.;

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியே இந்த யானைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழை வெள்ள காலத்தில் மின்னேரியா சரனாலயத்திலிருந்து காட்டு யானைகள் தங்குமிடங்களை மாற்றிக்கொள்வது வழக்கம் என்றும் அதற்கான இடப்பெயர்வின் போதே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் இடம் பெற்று சில மணி நேரத்திற்குள் உயிரிழந்த யானைகளின் வால்கள் அடையாளந்தெரியாத ஆட்களினால் நறுக்கி எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மூலம அறியமுடிகின்றது.

-BBC/Tamil

Published by

Leave a comment