காத்தான்குடி நகர சபை 2010, 2011 ம் ஆண்டுகளில் உள்ளுராட்சி செயலாற்றுகை திறன் மதிப்பீட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதற்காகவும், நகர முதல்வா் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் சபையை பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டும், நகர சபையின் பொது நுாலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத (ஒக்டோபா் 2012) நிகழ்வுகளுக்காகவும், மற்றும் உள்ளுராட்சி வாரம் 2012 நிகழ்வுகளையும் முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் மேற்படி முப்பெரும் விழா நடாத்தப் பட இருக்கின்றது.
காலம் : 21.12.2012. வெள்ளிக்கிழமை பி.ப. 03.30 மணி
இடம் : காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபம்.
தலைமை : அல்.ஹாஜ். SHM.அஸ்பா். JP
பிரதம அதிதிகள். ரியல் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம RSP , VSV , USP
கௌரவ அல்.ஹாஜ். நஜீப் அப்துல் மஜீட் (கௌரவ முதலமைச்சா்- கிழக்கு மாகாண சபை)
கௌரவ அல்.ஹாஜ். MLAM. ஹிஸ்புழ்ழாஹ் MA/MP (கௌரவ பிரதியமைச்சா் -சிறுவா் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்.)
மற்றும் ஏனைய அதிதிகள் பலா் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள இன் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



Leave a comment