இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ள இந்திய இராணுவ தளபதி பிக்ரம் சிங் தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்தனர் .
இந்திய இராணுவ தளபதி பிக்ரம் சிங்கை இராணுவத் தலைமையகத்தில் இலங்கை ஜெனரல் பிக்ரம் சிங், இலங்கை இராணுவ வீரர்களால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இரு தளபதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய ராணுவத் தளபதியின் இந்த விஜயத்தின்போதுஇ அவருடைய குழுவில் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங்கின் மனைவி சுர்ஜிட் கௌரும் இடம்பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவ நலன்பேணும் சங்கத்தின் தலைவியாக உள்ளார்.
இந்திய இராணுவ குழுவில், மேஜர் ஜெனரல் ரஜீவ் தெவாரி, கேணல் எஸ்.கே.ஆச்சர்யா, கேணல் எஸ்.சீ.தேவ்கன் மற்றும் கப்டன் ரஜீவ் மெத்திவ்ஸ் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர்.
தியத்தலாவவில் அமைந்துள்ள இராணுவத் தளத்துக்கு நேற்று விஜயம் செய்த இந்திய இராணுவத் தளபதிஇ இலங்கை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 2 மணிநேரம் செலவிட்டார். அப்போது இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படும் இலங்கை இராணுவ வீரர்கள் தற்போது பெறும் பயிற்சிகளை விட, மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட ஏற்பாடு செய்வதாக இந்திய இராணுவத் தளபதி பிக்ரம் சிங் தெரிவித்தார்.
இந்திய இராணுவத் தளபதி ,இலங்கை ராணுவத்தினருக்கு உதவுவதாகவும் வாக்குறுதி அளித்தார் .இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை இராணுவ அதிகாரிகள் 870 பேருக்கு இந்தியா வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி கல்லூரிகளில் பயிற்சியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment