9,50,000ஆவது உல்லாச பயணிகள் வருகை

tb[1]இந்த ஆண்டின் உல்லாச பயணிகள் வருகையின் இலக்கு நேற்று பூர்த்தியானது. இலங்கைக்கு 9லட்சத்து 50ஆயிரமாவது உல்லாச பயணிகள் போலந்து நாட்டிலிருந்து நேற்று இலங்கை வந்தடைந்தனர் .

போலந்து நாட்டின் Enter Air என்ற விமானம் மார்க்கமாக இங்கு வந்த இந்த போலந்து நாட்டு தம்பதியினருக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

சுற்றுலா அபிவிருத்திப் பணியக முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவுபர் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயாங்க வீரதுங்க ஆகியோர் இந்த உல்லாச பயணிகளை வரவேற்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு வருகை தரும் உல்லாச பயணிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment