இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 87ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளின் போது சிங்கள இசை உலகின் மூத்த கலைஞரான பண்டித் அமரதேவாவுக்கு ஜனாதிபதி நினைவுச்சின்னம் ஒன்றையும் காசோலையும் கையளித்தார் .
அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்த்தன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க உட்பட மற்றும் வானெலிக்கலைஞர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment