திங்கட்கிழமை (17.12.2012) காங்கேயனோடை வாவிக்கு பி்ப. 5.00. மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற இரு சகோதரர்கள் கானாமல் போயுள்ளனர்.காங்கேயனோடையைச் சோ்ந்த ஏ.பீ. றபாய்தீன் (34), எஸ்.எச்.சறுாக் (42) ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவருமே காணாமல் போய் உள்ளனா்.
தற்சமயம் அதிகமாக இறால்கள் பிடிபடுவதாகக் கூறிக் கொண்டே இவா்கள் ஆற்றுக்குச் சென்றதாகவும் சிலா் கூறுகின்றனா்.
கடந்த காலங்களில் காங்கேயனோடை மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போது, அம்மக்கள் மத்தியில் நின்று தோள் கொடுத்த சமூக சேவையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையும் இவா்கள் பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில் மீட்புப் பணிகள் தொடா்கின்றன.

Leave a comment