அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் மீனவா்களுக்கான எரி பொருள் நிரப்பும் நிலையம் உட்பட பல கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளனா். அவற்றினில் மிகப் பிரதானமானதுதான் ‘BEACH RESTUARENT’ ஆகும்.
மீனவா்கள் உட்பட காத்தான்குடி கடற்கரைக்கு பொழுதினைக்களிக்க வரும் பலா் இந்த ‘BEACH RESTUARENT’ யை அதிகம் பயன்படுத்தகின்றனா். சகல வசதிகளையும் கொண்ட தங்குமிட அறைகளும் வாடகைக்கு விடப்படுவதாக அறிய முடிகின்றது.
இந்த BEACH RESTUARENT இன் கட்டிடத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த ‘முன் கூரை’ நேற்று வீசிய பலத்த காற்றினால் துாக்கியெறியப்பட்டு வீதியில் வீழ்ந்துள்ளது.





Leave a comment