க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் பகுதி – 1 பரீட்சைக்கு முன்னமே வெளியானதா? என்ற உண்மை நிலையினைக் கண்டறிவதற்கான முழுமையான விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம். புஸ்பகுமார தெரிவித்தார்.
இதேவேளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் ஆகக்கூடிய தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்வ தாகவும் கல்வியமைச்சர் பந்துல குணவ ர்தன கூறினார்.
விஞ்ஞான பாட வினாத்தாளிலிருந்த வினாக்களை அச்சொட்டாக தனது மாதிரி வினாத்தாளில் வழங்கியதன் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர் ஒருவரை மையமாக வைத்தே சி.ஐ.டி.யினர் விசா ரணைகளை பல்வேறு கோணங்களிலும் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
குறித்த ஆசிரியர் கொழும்பில் பிரபல மானவராவார். தனியார் கல்வி நிறுவன மொன்றில் விஞ்ஞான பாடம் கற்பித்து வரும் இவ்வாசிரியர் முன்கூட்டியே வினாத்தாளை வெளியிட்டதாகத் தெரி வித்தே பரீட்சைகள் திணைக்களத்துக்கு கொழும்பிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் 15 ஆம் திகதி விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சைகள் நடைபெற்றன. இதன் பகுதி 1 இல் பல்தெரிவு வினாவில் 12 வினாக்கள் அதே ஆசிரியரினால் முன்கூட்டியே மாணவர்க ளுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் வெளிவந்தவையாகும்.
கேள்விகள் அச்சொட்டாக இருப்பதுடன் வழங்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளும் மாதிரி வினாத்தாளிலுள்ள அதே ஒழுங்கில் அமைந்துள்ளதுடன் உருவப் படங்களும் ஒரே மாதிரியாக வெளிவந்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.
ஆசிரியர் வழங்கிய பல் தெரிவுக்கான மாதிரி வினாத்தாளில் 40 கேள்விகளுள் 26 கேள்விகள் கட்டாயம் வரக்கூடியவையென அவர் மாணவர்களுக்கு கூறியுள்ளார். அதில் 12 கேள்விகள் அப்படியே வெளி யாகியிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
விஞ்ஞான வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியிருப்பதாக கூறி கொழும்பிலி ருந்து 15 பேர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறையிட்டுள்ளனர்.
இருப்பினும் சி.ஐ.டி.யினரின் விசாரணைகள் முடிவடையும் வரை எதனையும் திட்டவட்டமாக கூற முடியாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment