மீன் மழையும் சிவப்பு மழையும்

3530970572_62fa7c98a3[1] -MJ

தற்பொழுது நாட்டில் பரவலாக பெய்துவரும் மாரி அடைமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மரங்கள் சரிந்து, வீடுகள் குடைசாய்ந்து, வீதிகளும் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றன.

க.பொ.த. சா-த. பரீட்சை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்று நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் பரீட்சைக்கு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கி இருந்தனர்.

மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இன்று பகல் வேளையில் மீன் மழை பெய்துள்ளதாக தெரியவருகின்றது.

நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்தாகவும் தற்போது அவற்றில் சில பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப் படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கபட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகச் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.

இதற்கிடையில் மாத்தறை கிரிந்த பிரதேசத்தில் இன்று சிவப்பு மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் இந்த சிவப்பு மழைபெய்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, புகுல்வெல்ல என்ற இடத்தில் இவ்வாறு சிவப்பு மழை பொழிந்ததாக அப்பிரதேச செயலாளர் உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment