மாரி காலத்தில் கல்லடிப் பாலத்தின் கீழ் தென்படுவது பாம்புகளா?

-MJ

S_a85d00efd3[1]ஒவ்வொரு மாரிகாலத்திலும் இவ்வாறான புறளிகள்  எமது பிரதேசங்களில் ஏற்படுவது வழக்கம்.

கடந்த 5 வருடங்களாக இவ்வாறான பாம்புகள் கல்லடிப் பாலத்தின் கீழ் திரண்டு செல்வது வழக்கமாகும்.

அடை மழை காரணமாக பௌதீக சூழலில் ஏற்படும் விளைவாக இத்தகைய மாற்றங்களை உணர்ந்து கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக நீர் வாழ் உயிரினங்கள் இடப்பெயர்ச்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

இதே போல் கடலில் ஆண்டாண்டு காலங்களாக வாழும் ‘பால் சுறா’ மீன் இனங்கள் மட்டு வாவியில் அதாவது மாரிகாலங்களில் மாத்திரமே எமது ஆற்றங்கரைக்கு வந்து சேரும். அதுவரை கடலில் தலைமறைவாக வாழ்ந்த இச் சுறாமீன்கள் ஆற்றங்கரையில் மாரிகாலங்களில் மாத்திரமே பிடிபடும். அவை பல்லாயிரங்களுக்கு விலை போவதும் புதிதல்ல. இதே போல்தான் ஆமைகளும் தரையை நோக்கி இடப்பெயர்ச்சி செய்யும்.

இதே போல்தான் கடல் சிங்கம், கடற்புலி, கடல் ஆமை….தற்பொழுது கடற்பாம்புகள் எமக்குத் தென்படுகின்றன. முகத்துவாரம் ஊடாக இத்தகைய உயிரினங்கள் இடப்பெயர்ச்சிகளை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன.

எனவே பொதுமக்கள் இவ்விடயங்களில் விழிப்பாக இருப்பது முக்கியமானதொன்றாகும். இவைகள் பாம்புகள் அல்ல என்பதை மக்கள் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளல்வேண்டும். தேவையில்லாத வதந்திகளை புணைந்து மக்கள் மத்தியில் பரப்புவதை விட்டும் தவிர்க்கவேண்டும்.

IMG_2575[1]கடல் வீதியை நோக்கி வருவதும், மண்ணரிப்பு ஏற்படுவதும், கடல் கொந்தளிப்பதும், நிறம் மாறுவதும், மற்றும் கடல் இரைவதும் மாரிகால காலநிலையில் உள்ளவை என்பதை ஞாபகப்படுத்திற்கொள்க.

இதற்கிடையில் 21ம் திகதி உலகம் அழியப்போகின்றது என்ற வதந்தியுடன் இந்த கால நிலை மாற்றங்களையும் தொடர்புபடுத்தி அப்பாவி மக்களை திசை திருப்பும் விடயங்களில் சிலர் ஈடுபடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்புத் தேடுவதே ஓர் முஸ்லிமுக்கு உள்ள சிறந்த அமலாக இருப்பதும் தெரிந்துகொள்ள வேண்டியது.

Published by

Leave a comment