–பிராந்திய செய்தியாளர்
நேற்று காலை முதல் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடும் காற்றும் தொடர் மழையும் காரணமாக வழமை போன்று மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீதிகளில் வீழ்ந்துள்ளன. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக படுவாங்கரை, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தமையினால் வீதிகள் எங்கும் மழைநீர் நிறைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரதேசங்களில் புதிதாக இடப்பட்ட கொங்கிரீட் வீதிகளும் ஆங்காங்கே உடைந்து மழைநீருடன் அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
தமிழ் மக்கள் பொதுவாக டிசம்பா் மாதம் பெய்கின்ற மழையினை மார்கழி அல்லது நத்தார் மழை என்று சொரல்வார்கள்.மட்டக்களப்பில் கிறிஸ்மஸ் வியாபாரம் நடந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே மழை தொடங்கியிருக்கின்றது.
‘இம் மழை தொடருமாயின் சில தாழ்ந்த பகுதிகளில் வதியும் மக்கள் இடம் பெயர நேரிடும்’ என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
Leave a comment