சுகாதார வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானப் பணி

DSC01087டீன் பைரூஸ்.

காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் சுகாதார வாரத்தினை முன்னிட்டு சென்ற 4.12.2012 வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி ஒன்றினை மேற் கொண்டிருந்தனா்.சுத்தம் ஈமானின் பாதி என்றார்கள் நபி (ஸல்) அவா்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனது இருப்பிடங்களை, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இஸ்லாத்தின் பார்வையில் இது மிகப் பெரிய இபாதத் ஆகும்.

காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினா்கள் கடந்த 12.12.2012/13.12.2012 புதன்,வியாழன் ஆகிய நாட்களில் கடற்கரை  பகுதியினை அன்டியுள்ள வீடுகள், அரச கட்டடங்கள், பொது இடங்கள் என  சிரமதானம் செய்துள்ளனா்.

இறுதியாக 14/12/2012 வெள்ளிக்கிழமை காதான்குடி கடற்கரையில் வைத்து சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் சிறுவா்களுக்கான அன்பளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காத்தான்குடி தள வைத்திசாலையின் Dr.RM. ஆதில், Drஎம்.நஸ்ருத்தீன் மற்றும் MOH  சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.DSC01079DSC01113DSC01115DSC01085

Published by

Leave a comment