முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் அல்ஹாஜ் ULNM.முபீன் BA, JP அவா்களின் 2012 ம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடி முபீன் பௌன்டேஷன் ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற இடங்களில் பல்வேறு உதவிப் பொருட்களை பாடசாலை மாணவா்களுக்கு வழங்கி வருகின்றது.
அந்த வகையில் காத்தான்குடியிலுள்ள பாடசாலை மாணவா்களுக்கான பாடசாலைப் பை (SCHOOL BAGS) வழங்கும் நிகழ்வு காத்தான்குடி முபீன் பௌன்டேஷனின் தலைவா் அல்.ஹாஜ் MI. அப்துல் லெத்தீப் JP அவா்களின் தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் அல்ஹாஜ். ULNM.முபீன் BA. JP அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ நகர முதல்வா் அல்.ஹாஜ் SHM.அஸ்பா் JP, மா்சூக் அஹமட் லெப்பை JP உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டனா்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.






Leave a comment