கலாபூசண விருது வழங்கும் விழா இன்று!

tb[2]இலங்கையின் கலை இலக்கியத்துறைக்கு அரும்பங்காற்றிய 60வயதுக்குமேற்பட்ட மூத்த கலை இலக்கிவாதிகளுக்கான கலாபூசண விருது வழங்கும் விழா இன்று 15ஆம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகர்த்த கலையரங்கில் நடைபெறும்.

கலாசார அலுவல்கள் அமைச்சர் டீ.பீ.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பௌத்த சாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டீ குணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட மற்றும் பிமுகர்கள் பலரும் கலந்துகொள்வர்.

179 சிங்கள கலைஞர்களும் 60 தமிழ் கலைஞர்களும 25 முஸ்லிம் கலைஞர்களும் இன்றைய விழாவின் போது கலாபூசண விருதும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

கலாசார திணைக்களம் இந்து சமய விவகார திணைக்களம் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் ஆகிய மூன்று திணைக்களமும் இணைந்நே மேற்படி மூவினக் கலைஞர்களை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment