இலங்கை வரலாற்றில் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒன்றுதான் காத்தான்குடியில் இயங்கி வரும் அல்குா்ஆன் அபிவிருத்தி சபையாகும். காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லுாரியினுடைய தற்போதைய அதிபா் சங்கைக்குறிய மௌலான மௌலவி அல்.ஹாஜ். எம்.ஏ.அப்துல்லாஹ்( றஹ்மானி) அவா்களின் தலைமையில் அல்குா்ஆன் அபிவிருத்தி சபை இயங்கி வருகின்றது.
மிகக் கூடுதலான உலமாக்களின் பங்கு பற்றுதலுடன் இயங்கி வரும் இந்த உயா் சபை ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் காத்தான்குடி, பாலமுனை, காங்கயனோடையிலுள்ள சகல குா்ஆன் மதரசாக்கலிருந்தும் பரீட்சைக்கு எனத் தெரிவு செய்யப்படும் மாணவா்களுக்காக இறுதிப் பரீட்சை ஒன்றினை நடாத்தி வருகின்றனா்.
அந்த வகையில் 2012 ம் ஆண்டுக்கான பரீட்சை 15.12.2012 சனிக்கிழமை புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. மேற்படி பரீட்சைக்கு சுமார் 55 க்கும் மேற்பட்ட குா்ஆன் மதரசாக்களிலிருந்து 850 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டதுடன் அல்குா்ஆன் அபிவிருத்தி சபையினுடைய பல உலமாக்கள் மூலமாக மேற்படி பரீட்சை நடை பெற்றது.







Leave a comment