அமெரிக்க சிறுவர் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : 28 பேர் பலி!

school_2428330b[1]-MJ

அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சண்டி ஹுக் ஆரம்பப் பாடசாலை மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது

14_shootingmap_w_MED[1]இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வராத போதிலும் 28 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

2012-12-14T195917Z_1_CBRE8BD1JIW00_RTROPTP_2_USA-SHOOTING-CONNECTICUT[1]

பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இப்பாடசாலையில் படிக்கிறார்கள்.

2012-12-14T211832Z_1_CBRE8BD1N6Y00_RTROPTP_2_USA-SHOOTING-CONNECTICUT[1]பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மாநில பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும் அமெரிக்க வரலாற்றில் ஓர் மோசமான சம்பவமாக பதியப்பட்டிருக்கின்றது.

Published by

Leave a comment