பிரித்தானிய வெள்ளை இன பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி:
முஸ்லீம்கள் 4.8 வீதமாக உயர்வு!
பிரித்தானியாவில் 2011ல் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளி விபரங்கள் தற்பொழுது இறுதியாக வெளியிடப்பட்டிருக்கின்றது. 2001 இற்கும் 2011 இற்கும் இடைப்பட்ட 10 வருடங்களில் உந்நாட்டு பிறப்பு வீதத்திலும், மத வளர்ச்சி வீதத்திலும் பிரித்தானியா வீழ்ச்சியைக் கண்டிருப்பது அங்குள்ள வெள்ளை இனத்தவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.
பிரித்தானிய வெள்ளை பிறப்பு வீதம் 2001 இல் 91 வீதமாக இருந்தது. ஆனால் 2011 இல் 87 வீதமாகக் குறைந்திருக்கின்றது. 2001ல் 9 வீதமாக இருந்த வெளிநாட்டினரின் பிறப்பு வீதம் தற்பொழுது 13 வீதமாக அதிகரித்திருக்கின்றது.
இதனைவிடவும் பிரித்தானியாவின் தலை நகரமும் உலகின் முக்கிய தலை நகரங்களுள் ஒன்றாகவும் விளங்கும் புகழ்பெற்ற லண்டன் மாநகரில் 2001ல் 58 வீதமாக, பெரும்பான்மையாக இருந்த வெள்ளை இனத்தினர், 2011 இல் 44.9 ஆகக் குறைந்து இருக்கின்றனர். இதனடிப்படையில் லண்டன் நகரத்தில் 3 வெளிநாட்டவர்களுக்குள் ஒரு பிரித்தானியர் எனும் வீதத்தில் வெள்ளை இனத்தவரின் வீதம் தற்பொழுது இருக்கின்றது.
மேலும், மத வளர்ச்சியில் 2001ல் 71.7 வீதமாக இருந்த கிறிஸ்துவம் இப்போது 59.3 வீதமாக பாரிய சரிவை சந்தித்திருக்கின்றது. மத நம்பிக்கையற்றவர்கள் 14.8 வீதமாக இருந்து 25.1 வீதமாக இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 2001ல் 3 வீதமாக இருந்த முஸ்லிம்களின் வீதம் 2011 இல் 4.8 வீதமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது.
இந்த வகையில் பிரித்தானியாவின் சனத்தொகையில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 10 நாடுகளை பிரித்தானிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி, இந்தியா 694,000 (9%), போலந்து 579,000 (8%), பாகிஸ்தான் 482,000 (6%), அயர்லாந்து 407,000 (5%), ஜேர்மனி 274,000 (4%), பங்களாதேஸ் 212,000 (3%), நைஜீரியா 191,000 (3%), தென்னாபிரிக்கா 191,000 (3%), அமெரிக்கா 177,000 (2%), ஜமைக்கா 160,000 (2%) என்ற வீதத்தில் வெளிநாட்டினரின் உள்தாக்கங்கள் பிரித்தானிய புள்ளிவிபரத்தில் கடந்த 10 வருடங்களுக்குள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் இவ்அதிர்ச்சித் தகவலை அங்குள்ள ஊடகங்களும் சுட்டிக்காட்டி வருகின்றன.![article-2246689-0974E1A1000005DC-36_964x829[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/article-2246689-0974e1a1000005dc-36_964x8291.jpg?w=530&h=455)
![2011-census14[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/2011-census141.jpg?w=142&h=150)
Leave a comment