ஒளிரும் விண்கற்களை இலங்கையிலும் இன்று முதல் காணும் வாய்ப்பு

விண்கற்கள் செறிவாக காணப்படும் அண்டவெளியில் பூமி பயணிப்பதன் விளைவே இது

விண்கற்களை இன்று 14ம் திகதி இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று விண்ணியல் ஆய்வாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறைப் பேராசிரியருமான சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 17ம் திகதி வரையும் இலங்கையர் விண் கற்களைப் பார்க்கலாம். என்றாலும் அதனை 13ம், 14ம் திகதிகளில் வெற்றுக் கண்களால் தெளிவாகப் பார்க்க முடி யும்.

அந்த வகையில் இன்று மாலை முதல் மறுநாள் அதிகாலை வரையும் வெற்றுக் கண்களால் இவ்விண் கற்களைப் பார்க்கலாம். ஆகாயம் கடும் இருட் டாக இருக்கும் போது இக்கற்கள் மிகத் தெளி வாகத் தென்படும்.

இன்று மாலை முதல் இரவு வரை கிழக்கு புறமாகவும் நள்ளிரவில் ஆகாய உச்சிப் பகு தியிலும் அதிகாலையில் மேற்கு பகுதியிலும் இக்கற்களைப் பார்க்க லாம் என்றாலும், மறு நாள் அதிகாலை 1.03 மணிக்கு மிகத் தெளிவாகத் தென்படும். இக்காலப் பகுதியில் மணித்தியாலத்திற்கு நூறு கற்கள் வரை பார்க்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். விண்கற்கள் செறிவாக இருக்கும் அண்டவெளி பாதையில் புவி பயணம் செய்கின்றமையே இவ்வாறு விண் கற்களை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றமைக்கு காரணம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-தினகரன்

Published by

Leave a comment