பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது

ஐ. சி. சி முன்னாள் தலைவர் எச்சரிக்கை

பாகிஸ்தான் ஒருநாள் அணியில் அப்ரிடி நீக்கம்; இந்தியாவுக்கு எதிரான அணி அறிவிப்பு

s1212125[1]2008 ஆம் ஆண்டில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி எதுவும் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் எடுத்த முயற்சியினால் அரசின் அனுமதியுடன் இரு நாடுகள் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கிரிக்கெட் போட்டி தொடர் நடக்க இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பெங்களூரில் வருகிற 25 ஆம் திகதியும், இரண்டாவது 20 ஓவர் போட்டி அஹமதாபாத்தில் வருகிற 27 ஆம் திகதியும் நடக்கிறது.

முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் வருகிறது 30 ஆம் திகதியும், 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 3 ஆம் திகதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டில்லியில் ஜனவரி 6 ஆம் திகதியும் நடக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா சென்று விளையாடக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னாள் நிர்வாகியுமான இஷான் மணி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

இந்திய சுற்றுப்பயணத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது தவறான முடிவாகும். இது அரசியல் ரீதியாக முடிவு செய்யப்பட்டு இருந்தால், இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடுவதையோ அல்லது பொதுவான இடத்தில் விளையாடுவதையோ உறுதி அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினர் அரசியல்வாதிகளிடம் கேட்டு இருக்கவேண்டும். பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது என்பது தான் எனது கருத்தாகும். மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தியது. பொதுவான இடத்தில் இரு நாடுகளும் விளையாடினால் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதை அறிந்து இந்திய கிரிக்கெட் சபை அதனை தவிர்த்தது. இந்த போட்டி தொடர் இந்திய கிரிக்கெட் சபை கணிசமான தொகையை வருவாயாக ஈட்ட உதவுமே தவிர, பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடக்க உதவுவதாக இருக்காது. தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியானதாக இல்லை என்றார்.

அப்ரிடி நீக்கம்

s1212121[1]பாகிஸ்தான் அணியின் சகல துறை துடுப்பாட்ட வீரர் சஹிட் அப்ரிடி ஒரு நாள் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எனினும் இந்திய அணியுடனான 20இக்கு இருபது தொடரில் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். 3 ஒருநாள் போட்டியிலும் இரண்டு 20க்கு இருபது போட்டியிலும் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணி எதிர்வரும் 22ம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

அபுதாபியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அப்துல் ரஹ்மான், அய்ஸாஸ் சீமா, சொஹைல் தன்வீர் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் சுஐப் மலிக் ஆகியோரும் ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மத்தியதர துடுப்பாட்ட வீரரான அசாத் சபீக் காயம் காரணமாக விலகிக் கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட யூனிஸ்கான், வஹாப் ரியாஸ் மற்றும் உமர்குல் ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு சுல்பிகார் பார்பர் மற்றும் ஹாரிஸ் சொகைல் ஆகியோர் ஒரு நாள் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் சகல துறை ஆட்டக்காரர் சஹீட் அப்ரிடி ஒரு நாள் தொடரில் இருந்து நிறுத்தப்பட்டது சற்று கடினமான முடிவாக இருந்தாலும் அணியின் நலனை கருத்தில் கொண்டே இதனை மேற்கொண்டதாக பாகிஸ் தான் அணியின் பிரதம தேர்வாளர் இக்பால் காசிம் தெரிவித்தார்.

அப்ரிடியின் இடத்தை நிரப்புவதற்காக விரைவில் சிறந்த சகல துறை ஆட்டக்காரர் ஒருவரை உள்ளூர் கிரிக்கட் தொடரின் போது தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் அணிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வீரர் எனவும் அவர் தெரிவித்தார். போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி அணிக்கு பல சந்தர்ப்பங்களில் வெற்றிக்காக பாடுபட்டவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதே வேளை 20க்கு இருபது அணியில் பாகிஸ்தான் அணி சார்பாக புதிய முகங்களை அறிமுகப்படுத் தியுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் சபை, பாகிஸ்தான் அணியின் 7 அடி வீரர் மொஹமது இர்பான் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இதே வேளை உமர் ஆமின், அசாட் அலி, அஹமது செஷாத், ஜூனைட் கான் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.

ஒருநாள் அணி நiர் ஜெம்சத், மொஹமது ஹபீஸ், அசார் அலி, யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், ஹாரிஸ் சொகைல், கம்ரான் அக்மால், சயீட் அஜ்மல், வஹாப் ரியாஸ், ஜூனைட்கான், உமர்குல், இம்ரான் பர்ஹாத், உமர் அக்மால், அன்வர் அலி மற்றும் சுல்பிகார் பார்பர்.

20க்கு இருபது அணி

மொஹமது ஹபீஸ், நiர் ஜெம்சத், கம்ரான் அக்மால், உமர் அக்மால், சுஐப் மலிக், சஹீட் அப்ரிடி, சயிட் அஜ்மல், மொஹமது இர்பான், ஜூனைட் கான், சொகைல் தன்வீர், உமல் குல், அசாட் அலி, சுல்பிக்கார் பார்பர், அஹமத் செஷாத்.

-தினகரன்

Published by

Leave a comment